Friday, June 8, 2007

மலேசிய பிரதமருக்கு திருமணம்


கோலா லம்பூர் ஜூன் 9
மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அ ஹமது பதாவி இன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய ஜீன் என்கிற 53 வயது பெண்மணியை மறுமணம் புரியவிர்க்கிறார்

மலேசிய பிரதமரின் மூத்த மனைவி டத்தின் ஸ்ரீ எந்தோன் மஹமூத் கடந்த 2005ம் ஆண்டு புற்றுநோயால் மரணமுற்றார் அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் தனது மனைவியின் மீது அளவுககடந்த பாசம்கொண்ட பிரதமர் அப்துல்லாஹ் தனது மனைவியின் மறைவால் நிலைலைகுந்து போனார் அவரது மகள் மற்றும் மருமகனின் தொடர் முயற்சியால் 63 வயது பிரதமர் அப்துல்லாஹ் ஒப்புக்கொண்டிருக்கிறார்

அவரது இந்த முடிவாள் அவரது குடும்பத்தாரும் அவரது தலைமையிலான அம்னோ கட்சி தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மலேசிய பிரதமர்
டத்தோ ஸ்ரீ அப்துல்லாஹ் ioc எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, June 7, 2007

தமிழக முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு...!

சென்னை ஜூன் 5 தமிழ்நாடு தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி தமிழ்நாடு முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி வேலை மற்றும் அரசியல் அதிகாரத்தில் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக உயர் மத்த அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்


கலைஞர். மு. கருணாநிதி

இந்த ஆலோசனையில் தமிழ்நாடு அரசு வழக்கரிங்கியர் விடுதலை தமிழ்நாடு பி ற் படுத்த பட்டோர் ஆணைய தலைவர் நீதிபதி ஜனார்த்னன் நீதிபதி சண்முகம் தமிழ்நாடு பி ற் படுத்த பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலா ஆணைய தலைவர் வாசுதேவன் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்

அப்போது கடந்த காலங்களி ல் இது சம்மந்தமாக தமுமுகவாள் கொடுக்கப்பட்ட ஆவனங்களும் ஆராயபபட்டது சத்த சிக்கல் இல்லாமல் தமிழக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய பணிகள் துவங்க பட்டுள்ளது "எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

அன்மையில் ராம் நாத புறத்தில் நடைபெற்ற தமுமுகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை அணிவகுப்பு

Wednesday, June 6, 2007

மலேசிய தமுமுகவின் பொறுப்புக்குழு கூட்டம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது வீரியமிக்க சமுதாய பணிக்ளால் தமிழக முஸ்லிம்களை மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்திய வம்சாவழி முஸ்லிம்களின் பெறாதரவை பெற்று வருகிறது அந்த வகையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களைகொண்ட கிழக்காசிய நாடான மலேசியாவில் தமுமுக் வெகு வேகமாக தனது கிளைகளை அமைத்து வருகிறது சமீபத்தில் தமுமுக் தலைவர் பேராசிரியர். எம்.ஹெஜ்.ஜவஹிரு ல்ளாஹ் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தபோது மக்கள் காட்டிய ஆர்வமே அதர்க்கு சான்று. பேராசிரியரின் மலேசிய பயணத்தின் போது மலேசியவெங்கிலும் வாழும் தமுமுக் ஆதரவாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு தமுமுகவின் செயல்பாடுகளை இங்கு வாழும் மக்களும் பயன்படுத்தும் வண்ணம் தமுமுகவின் கிளைகளை நாடெங்கிலும் அமைக்க அனுமதி கேட்டு பெற்றார்கள் அதன் தொடர்ச்சியாக மலேசிய தலைநகர் கோலாலாம்பூரில் மலேசிய தமுமுகவின் முதல் அமைப்புகுழு கூட்டம் பேராசிரியர் தலைமையில் நடந்தேரிய்து அந்த அமைப்புகுழு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக மலேயாவின் எல்லை மாநிலமான ஜோஹூரில் இருந்தும்கூட தமுமுகவினர் வந்திருந்தது ஆச்சரியதை ஏற்படுத்தியது நடைபெற்ற அந்த கூட்டத்தில் சுமார் ஆறு மாநிலங்களுக்கான பொறுப்புக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது அதேவெளையில் அமைப்பை மலேசிய அரசின் அனுமதியோடு முறையான பதிவு பெற்று செயல்படுதவும் தீர்மானிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக கடந்த ஒருமாதகால பணிகளை பரிமாறிக்கொள்ளும் விதமாகவும் எதிர்கால பணிகளை எப்படி மேற்க்கொள்வது என்பதை பற்றி கலந்து ஆய்வு செய்வதற்காகவும் எதிர்வரும் 10ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை கோலாலாம்பூரில் உள்ள ABC உணவகத்தின் கூட்ட அரங்கில் சீலாங்கூர் மற்றும் கூட்ட ர சு பிரதேச மாநிலங்களின் பொதுகுலு கூட்டம் அம்மாநில பொறுப்புக்குழு தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்காளான சகோதரர்கள் சுலைமான், பொ த் குடி தாஜூதீன், தேவி பட்டினம் பர் வீஷ் கான், ஆனந்தூர் சேட், கும்பகோணம் பரக்த் அலி ஆகியோர் முன்னிலை வகிக்க நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் மலேசிய சிங்கப்பூர் மண்டல ஒருங்கிணப்பாளரான சகோதரர் வேங்கை இப்ராகிம் மற்றும் சிவகங்கை மாவட்ட தமுமுக் தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர் மௌலா நாசர் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்

Tuesday, June 5, 2007

மலேசிய பிரமுகர்களுக்கு தமுமுக் விருந்து உபசாரிப்பு...

அன்மையில் சென்னையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகம் வந்திருந்த மலேசிய நாட்டு பிரமுகர்களுக்கு தமுமுகவின் சார்பில் விருந்து உபசரிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது அச்சமயம் தமுமுகவின் பணிகளை விளக்கும் ஆவண திரையிடப்பட்டது

இந் நிகழ்ச்சியில் மலேசியாவின் இஸ்லாமிய கல்வி வாரிய தலைவர் டத்தோ முஹமது இக்பால் மலேசிய இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் (பெர்மிம்) தேசிய தலைவர் டாக்டர் செய்யத் இப்ராகிம் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் ஆலோசகர் ஜணாப் முஹமது ஹணிபா மலேசிய இந்திய முஸ்லிம் உணாவ்க உரிமையாளர் சங்க துணை தலைவர் ஜணாப் க்மருள் ஜ்மான் பினாங்கு சமூக சேவகர் ரியாழுத்தீன் உட்பட பலர் கலந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்