கோலா லம்பூர் ஜூன் 9
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்
விலாயா மற்றும் சீலாங்கூர் மாநில பொதுகுழு
அம்மாநில பொறுப்புக்குழு தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது
இப்பொதுகுழுவிர்க்கு மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்களான சகோதரர்கள் சுலைமான் பரகத் அலி பர்விஸ்கான் பொதகுடி.தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கடந்த மாதம் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்ளாஹ் அவர்கள் மலேசியா வந்திருந்தபோது மாநில பொறுப்புக்குழுக்கள் மலேசியாவில் நியமிக்கபட்டது அந்த பொறுப்புக்குழுக்களின் கடந்த ஒரு மாத நிகழ்வுகளை செயல்பாடுகளை பகிந்துக்கொள்வதற்காகவே இப்பொதுகுழு கூட்டபட்டது கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார் மலேசிய சிங்கப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளரான சகோதரர் வேங்கை இப்ராஹீம் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு உறுப்பினார் சேர்ப்பதிலும் மக்கள் உரிமை வார இதழுக்கான சந்தா சேர்ப்பதிலும் ஆர்வத்தோடு செயல்பட்டு கொண்டிருப்பதாள் இயக்கம் தனது வீரியமிக்க செயல் வீச்சுக்ளை மலேசியாவிலும் செயல்படுத்தபோகும் நாள் வெகு தொலைவில் இல்லையென அவர் குறிப்பிட்டார்.
பொதுக்குழுவில் பார்வையாளராக கலந்து கொண்ட மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலைய அதிகாரி சகோதரி ரேஹான் பீவி தமுமுகவை பற்றி தான் நிறைய கேள்வி பட்டிருபதாகவும் சமீபத்தில் தான் தமிழகம் சென்றிறுந்தபோது அவற்றை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சொன்னார் இண்றைய காலத்திர்க்கு மலேசியாவில் வாழும் நமது சமூக மக்களுக்கு தமுமுக போன்ற அமைப்பிருந்தால் நன்மைகள் பல செய்யமுடியுமே என்று நினைத்தேன் அதன் செயல்பாடுகள் நடைமுறை படுத்தபடுவதர்க்கு இங்கும் தமுமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தபோது நான் மிக மகிழ்ச்சியடைந்தேன் ஆகையால்தான் அழைக்கபடாத போதும் நானும் என் கணவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோம் என்றார் அப்போது கூட்டத்தில் இருந்த அனைவரும் அல்லாஹ் அக்பர் என குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை காட்டினார்கள்
மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கப்பூர் மலேசிய மண்டல பார்வையாளாரும் சிவகங்கை மாவட்ட தலைவருமான மௌலா நாசர் தமிழக பணிகள் குறித்து விளக்கினார் சிவகங்கை மாவட்ட முன்னால் தலைவர் சகோதரர் ஜபருள்லாஹ் அவர்களும் தொழில் அதிபர் சகோதரர் ஜாலாலுதீன் அவர்களும் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்
இம் மாத இறுததிக்குள் தலைநகரில் சமுதாய நிகழ்ச்சி ஒன்று நடத்துவதென முடிவு செயப்பட்டது முடிவில் சகோதரர் அப்துல் ரஷீத் து ஆ ஓதி முடித்து வைத்தார்
Sunday, June 10, 2007
Subscribe to:
Posts (Atom)

