Wednesday, June 6, 2007

மலேசிய தமுமுகவின் பொறுப்புக்குழு கூட்டம்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது வீரியமிக்க சமுதாய பணிக்ளால் தமிழக முஸ்லிம்களை மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்திய வம்சாவழி முஸ்லிம்களின் பெறாதரவை பெற்று வருகிறது அந்த வகையில் அதிகமான தமிழ் முஸ்லிம்களைகொண்ட கிழக்காசிய நாடான மலேசியாவில் தமுமுக் வெகு வேகமாக தனது கிளைகளை அமைத்து வருகிறது சமீபத்தில் தமுமுக் தலைவர் பேராசிரியர். எம்.ஹெஜ்.ஜவஹிரு ல்ளாஹ் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தபோது மக்கள் காட்டிய ஆர்வமே அதர்க்கு சான்று. பேராசிரியரின் மலேசிய பயணத்தின் போது மலேசியவெங்கிலும் வாழும் தமுமுக் ஆதரவாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு தமுமுகவின் செயல்பாடுகளை இங்கு வாழும் மக்களும் பயன்படுத்தும் வண்ணம் தமுமுகவின் கிளைகளை நாடெங்கிலும் அமைக்க அனுமதி கேட்டு பெற்றார்கள் அதன் தொடர்ச்சியாக மலேசிய தலைநகர் கோலாலாம்பூரில் மலேசிய தமுமுகவின் முதல் அமைப்புகுழு கூட்டம் பேராசிரியர் தலைமையில் நடந்தேரிய்து அந்த அமைப்புகுழு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக மலேயாவின் எல்லை மாநிலமான ஜோஹூரில் இருந்தும்கூட தமுமுகவினர் வந்திருந்தது ஆச்சரியதை ஏற்படுத்தியது நடைபெற்ற அந்த கூட்டத்தில் சுமார் ஆறு மாநிலங்களுக்கான பொறுப்புக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது அதேவெளையில் அமைப்பை மலேசிய அரசின் அனுமதியோடு முறையான பதிவு பெற்று செயல்படுதவும் தீர்மானிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக கடந்த ஒருமாதகால பணிகளை பரிமாறிக்கொள்ளும் விதமாகவும் எதிர்கால பணிகளை எப்படி மேற்க்கொள்வது என்பதை பற்றி கலந்து ஆய்வு செய்வதற்காகவும் எதிர்வரும் 10ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை கோலாலாம்பூரில் உள்ள ABC உணவகத்தின் கூட்ட அரங்கில் சீலாங்கூர் மற்றும் கூட்ட ர சு பிரதேச மாநிலங்களின் பொதுகுலு கூட்டம் அம்மாநில பொறுப்புக்குழு தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்காளான சகோதரர்கள் சுலைமான், பொ த் குடி தாஜூதீன், தேவி பட்டினம் பர் வீஷ் கான், ஆனந்தூர் சேட், கும்பகோணம் பரக்த் அலி ஆகியோர் முன்னிலை வகிக்க நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் மலேசிய சிங்கப்பூர் மண்டல ஒருங்கிணப்பாளரான சகோதரர் வேங்கை இப்ராகிம் மற்றும் சிவகங்கை மாவட்ட தமுமுக் தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர் மௌலா நாசர் ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்

No comments: